Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

AI மூலம் அதிகாரி போல Ph Call; 12.9 கோடி டாலர் மோசடி - உஷார்

AI மூலம் அதிகாரி போல Ph Call; 12.9 கோடி டாலர் மோசடி - உஷார்

தொலைபேசி அல்லது காணொலி அழைப்புகளில் ஏஐ மூலம் அதிகாரியின் குரலையும் சில நேரங்களில் அவரது தோற்றத்தையும் போலியாக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிறுவன தலைமை செயல் அதிகாரிகளின் குரலையும், தோற்றத்தையும் போலியாக உருவாக்கி, சுமார் 12.9 கோடி அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக மூவர் மீது அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி, ஜேக்கப் சோல், ஷரோன் ஹசன், கை ஷீட்ரிட் ஆகியோர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக உலகெங்கும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களைக் குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் அமெரிக்க மருத்துவமனை வலையமைப்புகள், ஒரு வங்கி, பிரிட்டனைச் சேர்ந்த நிதித் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை அடங்கும்.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுப்புவதுபோல கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, ரகசியப் பணப் பரிவர்த்தனைக்கு உதவி கேட்டதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது. பின்னர் தொலைபேசி அல்லது காணொலி அழைப்புகளில் ஏஐ மூலம் அதிகாரியின் குரலையும் சில நேரங்களில் அவரது தோற்றத்தையும் போலியாக உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்பின், ஒரு பெரிய சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞரைத் தொடர்புகொள்ளுமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளனர். அந்த வழக்கறிஞர் போலவும் பேசி, வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பெரும் தொகைகளை அனுப்புமாறு அறிவுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பணம் வந்த தடத்தை மறைக்க, அதை கிரிப்டோ நாணயமாக மாற்றியதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மின்னணுப் பரிவர்த்தனை மோசடி, அடையாளத் திருட்டு, பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி
Trump questions Russian fuel ban, signals no change
அடுத்த செய்தி
Blames election results for stock market plunge

தொடர்புடைய செய்திகள்